53வது நினைவு நாள்: அண்ணா நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை
சென்னை:
திமுக தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அண்ணா நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து வணங்கி மரியாதை செலுத்தினார்கள்.
பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
திமுக தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அண்ணா நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர் பாபு, நே.சிற்றரசு, மாதவரம் சுதர்சனம், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., தலைமை நிலைய செயலாளர்களான வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், துறைமுகம் காஜா. பகுதி செயலாளர்கள் மதன்மோகன், ஏழுமலை, ஜெ.கருணாநிதி எம்.எல்.ஏ., விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, அகஸ்டின்பாபு, சேப்பாக்கம் பகுதி துணை செயலாளர் வி.பி.சிதம்பரம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரஞ்சன், நித்யா, பாண்டி பஜார் பாபா சுரேஷ், புழல் நாராயணன் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்து மரியாதை செலுத்தினார்கள்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அண்ணா நினைவு நாளில் வாலாஜா சாலையில் இருந்து பேரணியாக நடந்து வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். இப்போது கொரோனா பரவல் உள்ள காரணத்தால் பேரணியாக செல்லாமல் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆலந்தூரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்துக்கு காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.
அதிமுகவினர் மலர் வளையம் வைத்து மரியாதை
அதிமுக சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 53-வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து வணங்கி மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், அமைப்புச் செயலாளர் பொன்னையன், ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி, கே.எஸ்.விஜயகுமார், மாநில மாணவரணி துணை செயலாளர் ஆ.பழனி, அம்மா பேரவை மாநில துணை செயலாளரான பரங்கிமலை ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் டாக்டர் சுனில், செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல், மாவட்ட கழக செயலாளர்கள் ஆதிராஜாராம், தி.நகர் சத்யா, வேளச்சேரி அசோக், பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், விருகை ரவி, பெஞ்சமின், அலெக்சாண்டர், மாணவரணி ராமலிங்கம், ராயபுரம் பாலாஜி, நொளம் பூர் இம்மானுவேல், முகப்பேர் இளஞ்செழியன், 117-வது வட்ட செயலாளர் பி.சின்னையன் என்கிற ஆறுமகம் உள்பட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
No comments
Thank you for your comments