4 புதிய 108 அவசர கால வாகனங்கள் சேவை தொடங்கி வைத்தார் ஆட்சியர்...
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 4 புதிய 108 அவசர கால வாகனங்கள் சேவை ஊர்திகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பொதுமக்களின் இன்னுயிரை காக்கும் ‘108’ அவசரகால ஊர்தி சேவை திட்டம் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2008-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.
இச்சேவைகள் மேலும் துரிதமாக கிடைக்கும் வகையில், காலதாமதத்தை குறைத்திட புதிதாக 188 அவசரகால வாகனங்களின் சேவையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் (23.02.2022) அன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.77,76,096 மதிப்பில் 4 புதிய அவசர ஊர்தியினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (28.02.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேலும் இந்த புதிய அவசர ஊர்தியானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் ஆரம்ப சுகாதார நிலையம், மதுரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம், வல்லம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஐயப்பன்தாங்கல் பஞ்சாயத்து அலுவலகம் ஆகிய இடங்களில் இன்று முதல் செயல்படுத்தப்படும்.
தற்போது கூடுதலாக, அவசரகால வாகனங்கள், இச்சேவையில் இணைக்கப்படுவதன் மூலம், அதிக அளவில் பொதுமக்கள் பயனடைவதோடு, சேவைக்காக காத்திருக்கும் நேரமும், மருத்துவமனைக்கு சென்றடையும் கால அளவும் குறையும்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.பன்னீர்செல்வம், இணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மரு.கிருஷ்ணகுமாரி (பொ), மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments