லதா மங்கேஷ்கர் மறைவு- 2 நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிப்பு
புதுடெல்லி:
நாடு முழுவதும் இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுமார் ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 92.
அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து நாடு முழுவதும் இன்றும் நாளையும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
No comments
Thank you for your comments