மத்திய பட்ஜெட் 2022-2023 : கூடுதல் மாறுபட்ட கலால் வரியாக லிட்டருக்கு 2 ரூபாய் விதிப்பு...அக்டோபர் முதல் அமல்...
சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தகவல் தொழில்நுட்பம் அடிப்படையில் அனைத்து சுங்க நிர்வாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மூலதனப் பொருட்கள் மற்றும் திட்ட இறக்குமதிக்கான சலுகை அடிப்படையிலான வரி விகிதங்கள் படிப்படியாக நீக்கப்பட்டு, 7.5 சதவீத வரி விதிக்கப்படும். உள்நாட்டில் தயாரிக்கப்படாத நவீன இயந்திரங்களுக்கான குறிப்பிட்ட வரி விலக்குகள் தொடரும்.
கலப்பு எரிபொருள் பயன்பாட்டுக்கு அரசு முன்னுரிமை வழங்கும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். கலப்பு எரிபொருளை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் மாறுபட்ட கலால் வரியாக லிட்டருக்கு 2 ரூபாய் விதிக்கப்படும் என்றும், இந்த புதிய வரி விதிப்பு 2022 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில், உள்நாட்டு தொழிற்சாலைகள் மற்றும் மேக் இன் இண்டியா திட்டத்தின் செயல்பாட்டு வரி விகிதங்கள் இருக்க வேண்டும்.
வேளாண்துறை சார்ந்த கருவிகள் மற்றும் உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கான வரி விகிதங்கள் முறைப்படுத்தப்படும்.
இறக்குமதி செய்யப்படும் இரும்புக் கழிவுக்கான சுங்க வரி விலக்கு நீட்டிக்கப்படும்.
No comments
Thank you for your comments