எஸ்.சி/எஸ்.டி/எஸ்.சி.சி மாணாவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு...
காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் எஸ்.சி/எஸ்.டி/எஸ்.சி.சி மாணாவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவிதொகை பெற விண்ணப்பிப்பதற்காக 06.01.2022 அன்று இணையதளம் திறக்கப்பட்டு, 10.02.2022 இறுதி நாள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே தகுதியுள்ள ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்கள் தமது கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதிச் சான்று, வருமான சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்புக் கணக்கு புத்தக நகல், ஆதார் கார்டு நகல் உள்ளிட்ட இன்ன பிற ஆவணங்களுடன் 10.02.2022க்குள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வெளியீடு : செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.

No comments
Thank you for your comments