நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அதிக இடத்தில் போட்டியிட திட்டம் தீட்டும் அதிமுக, திமுக..! - கூட்டணி கட்சிகளின் நிலை என்ன?
சென்னை, ஜன.4-
கடந்த இரண்டு ஆண்டாக நம்மளை பாடாய் படுத்துகிறது கொரானா தொற்று.... விடாது கருப்பு என விதவிதமாக உருமாறி துரத்துகிறது... இதுபோதாது என்று தமிழகத்தில் அடிக்கடி மிரட்டி விட்டு போகும் மழை, தத்தளிக்கின்றது தலைநகரம்... பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையிலும் அரசியல் கட்சிகள் தங்களது வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்... அரசியல் சதுரங்க ஆட்டத்தை ஆடுகின்றனர்...
அன்மையில் நடந்த முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் படுஜோராகா நடந்து முடிந்தது... திமுகவே அதிக இடத்தை பிடித்து அசராது நின்றது... அதிமுகவிற்கு பேரிடியாக அமைந்து... இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களைகட்டுறகிறது... யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல என்று அனைத்து கட்சிகளும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளில் மும்மரமாக காய் நகர்த்தி அரசியல் சதுரங்க ஆட்டத்தை ஆட ஆரம்பித்துள்ளனர்
ஒமிக்ரான் தொற்று ஒழிப்பு என பல்வேறு பிரச்சனைகளில் திமுக அரசு தீவிரம் காட்டி வந்தாலும், மிக முக்கியமான விஷயமாக உள்ளாட்சி தேர்தல் வியூகம் கட்சிக்குள் சைலண்ட்டாக நடந்து வருகிறதாம்.. எதிர்கட்சியான அதிமுக விடுமா? அந்த கட்சியும் தன் பங்குக்கு பட்டைய கிளப்ப ஆரம்பித்துவிட்டது..
ஆம்... தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஜனவரி 31ம் தேதிக்குள் இந்த தேர்தலை நடத்துமாறு சுப்ரீம்கோர்ட்டும் ஏற்கனவே கெடு விதித்துள்ளதால் அனேகமாக பொங்கலையொட்டி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்களிடம் ஒவ்வொரு கட்சியிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.. அந்த வகையில், திமுக, அதிமுக கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன..
இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த திமுகவினரிடம் அமாவாசை நாளன்று சிறப்பாக நேர்காணலை தொடங்கி நடத்தி வருகிறார்கள் திமுக மாசெக்கள்.. சென்னையில் மாவட்ட அலுவலகங்களில் சத்தமில்லாமல் நேர்காணலும் துவங்கியிருக்கிறது.
இதேபோன்று, அதிமுகவும் படுபிஸியாகிவிட்டது.. பேச்சுவார்த்தையையும் ஆலோசனையையும் முக்கிய தலைவர்கள் நடத்தி வருகிறார்கள்.. தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோரிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தி உள்ளார்..
அப்போது, முனுசாமியும், சிவி சண்முகமும், 90-95 சதவீத இடங்களில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளதால், நாமும் அப்படியே போட்டியிடலாம், ஆனால் வழக்கம்போல் பாஜகவுக்கு அள்ளி தந்துவிட்டால், அங்கெல்லாம் திமுக ஜெயித்து விடும்... நமக்குதான் கஷ்டம்.. அதனால், 3 சதவீத இடங்களை பாஜகவுக்கு விட்டுத்தரலாம்... அதுக்கு ஒத்து வரவில்லையெனில் தனித்து போட்டியிடுவோம்' என்று சொல்லி உள்ளனராம்....
இதுதான் அதிமுக கூட்டணிக்குள் புயலை வீச ஆரம்பித்துள்ளது.. இதுகுறித்து பாஜக தரப்பில் விசாரித்தபோது, அதிமுக கூட்டணியில் எங்களை தவிர வேறு பிரதான கட்சிகள் எதுவும் கிடையாது. அந்த வகையில், 25 சதவீத இடங்களை அதிமுகவிடமிருந்து எங்கள் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்... குறிப்பாக சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் இருக்கின்றன.
இதில் 50 வார்டுகளை பாஜக கேட்கிறதாம்.... இதற்கு ஒப்புக்கொண்டால் கூட்டணி தர்மம் ஆரோக்கியமாக இருக்குமாம்... அதிக இடங்களில் போட்டியிடும் போதுதான் அதிக இடங்களில் ஜெயிக்க முடியும் என்ற கணக்கீட்டின் படி 25% இடங்களை கேட்கிறது பாஜக என்கிறார்கள் கமலாலய வட்டார நிர்வாகிகள்...
இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.. சமீப காலமாக நடந்து முடிந்த தேர்தல்களில் பாஜகவுடனான கூட்டணியால்தான், அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்புகள் சரிவர கிடைப்பதில்லை என்ற பேச்சு உள்ளது.. இதை அதிமுக சீனியர் தலைவர்களே பல முறை வெளிப்படையாக சொல்லி உள்ளனர்.. இப்போதும் அப்படியான எண்ணங்களும், கருத்துக்களும் அதிமுகவுக்குள் இருக்கத்தான் செய்கின்றன.. பாஜக இல்லாமல் தனித்து போட்டியிடும் அளவுக்கு அதிமுக இன்றும் வலிமை பொருந்தியே இருக்கிறது என்பதை மறுக்க முடியாது..
ஆனால், அதேசமயம் பாஜகவை பகைத்து கொள்ள அதிமுக மேலிடம் தயாராக இருக்குமா? என்ற கேள்வியும் எழுகிறது... காரணம், மத்திய அரசின் முக்கிய அறிவிப்பான, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்று சொல்லி கொண்டே இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. அதாவது, ஒரே நேரத்தில் பாராளுமன்றத்திற்கும் அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் இதனால் கோடிக்கணக்கான பணம் மிச்சமாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்ததை சமீப காலமாக எடப்பாடி பழனிசாமியும் சொல்லி வரும் நிலையில், பாஜகவை தவிர்த்து போட்டியிட அதிமுக தயாராகுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியே...
ஆனால், இவ்வளவு பேசும் பேச்சும் தமிழக பாஜக, தனித்து நிற்க தயார், 60 இடங்களில் வென்று காட்டுவோம் என்று சொல்கிறதே தவிர, இதுவரை தனித்து போட்டியிட்டது கிடையாது என்ற விமர்சனம் தமிழகத்தில் இருக்கவே செய்கிறது.. இந்த முறையும் தமிழக பாஜக தனித்து போட்டியிட போவதாக சொல்லப் போகிறதா? அல்லது கூட்டணி தலைமை எவ்வளவு சீட் தருகிறதோ அதை பெற்றுக் கொள்ள முன்வருமா? அல்லது டிமாண்ட் வைக்குமா? என்றெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.... 4 இடங்களில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர் பாஜக... அதேபோன்று மாநகராட்சி இடங்களிலும் வெற்றி பெறவேண்டும் என்று தீர்மானமாக உள்ளனர்... தமிழக பாஜக தலைவர் நாங்கள் சலைத்தவர்கள் அல்ல என்ற நிலையில் தீவிரமாக செயல்பட்டுவருகிறார் என்றுதான் சொல்லவேண்டும்... ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி யார்?.... நாங்கள் என்று பாஜக அண்ணாமலையில் செயல்பாடுகள் உள்ளன என்பது நிதர்சனம்... தாமரையை மலர வைத்தே தீரவேண்டும் என்று பாஜகவினர் மெல்ல ஒவவொரு காயாக நகர்த்தி ஆடிவருகின்றனர்... அதிமுக அதில் சிக்கி உள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்று...
அதிமுகவால் அவ்வளவு எளிதாக பாஜகவை கழட்டி விட முடியாது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள் பாஜவை பல்லக்கில் தூக்கும் இடத்தில்தான் அதிமுக உள்ளது... என்று அரசியல் விமர்ச்சகர்கள் தீர்க்கமாக கூறுகின்றன... இதற்கு முக்கிய காரணமாக சசிகலாவும் தனது பங்குக்கு ஆட்டம் ஆடி வருகிறார்... இவரை சமாளிக்க வேண்டுமென்றால் அதிமுகவுக்கு பாஜகவின் தயவு தேவையே... அதனால் கூடுமான வரை பாஜக எதிர்பா£க்கும் அளிவுக்கு இல்லையென்றாலும் கூட குறைய பேச்சுவார்த்தை யில் கனசமான இடத்தை பாஜக பெற்றே தீரும்... என்பதில் ஐயமில்லை என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெருவித்து வருகின்றனர்... அதிமுக கூட்டணியில் பாஜக கரைசேர்ந்துவிடும் என்றுதான் கூறவேண்டும்...
ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸின் நிலையோ பரிதாபம்... கெடுபிடியும் காட்டமுடியாது... ஆனால் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூட்டணி தர்மத்தை கடைபிடித்து வருகிறார்... என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக தெரிகிறது... கூட்டணி கட்சிகளுடன் நட்புறவும், கூட்டணி தர்மமும் நிலைநாட்டி வருகிறார்... இதற்கு சான்று கூட்டணி கட்சிகளின் புகழாரமே... அதனால் திமுகவே கூட்டணிக்கு ஏற்றார்போட் இட ஒதுக்கீடு செய்வார் என்ற நம்பிக்கையில் கூட்டணி கட்சிகள் உள்ளன... அதே சமயததில் உள்ளூர ஒரு நெருடலும் இருக்கத்தான் செய்கிறது...
அனைத்து அரசயில் கட்சிகளும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் அரசியல் சதுரங்க ஆட்டத்தை ஆட ஆரம்பித்துள்ளனர்... பரபரப்புக்கு பஞ்சம் இல்லை இனி...
No comments
Thank you for your comments