கோட்டை ஈஸ்வரன் கோவில் வாசலில் பொங்கல் விழா...
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா அவர்களின் நல் ஆசியோடு ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலின் அருகே 36-வது வார்டுக் குட்பட்ட பகுதியில் இரண்டாம் மண்டலத் தலைவர் ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி அவர்கள் தலைமை தாங்கி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர்களான பா.ராஜேஷ் ராஜப்பா, கே.புனிதன், பாபு என்கிற வெங்கடாஜலம், பொதுச் செயலாளர்களான டி. கண்ணப்பன், இரா.கனகராஜ், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், முன்னாள் நகர தலைவர் குப்பண்ணா சந்துரு, முன்னாள் மொடக்குறிச்சி வட்டாரத் தலைவர் வி எம் கே செந்தில் ராஜா, நிர்வாகிகளான கே. ஜே. டிட்டோ, நான்காம் மண்டல சிறுபான்மை துறை தலைவர் சூர்யா சித்திக், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே என் பாஷா, நிர்வாகிகளான அல்டிமேட் தினேஷ், லயன் முகமது இப்ராஹிம், பரணி, ஈரோடு மாநகர் மாவட்ட தேசிய தொழிலாளர் காங்கிரஸ் NCWC தலைவி ஆர் கிருஸ்ணவேணி,மகிளா காங்கிரஸ் நிர்வாகி ஆர் சுதா, ஈரோடு மேற்கு சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் திண்டல் பாலாஜி, தம்பி கார்த்தி, முன்னாள் சேவா தள மாவட்ட தலைவர் கொடுமுடி தனபால் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
No comments
Thank you for your comments