முட்டவாக்கம் ஊராட்சியில் மாதாந்திரக் கூட்டம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் முட்டவாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தெய்வானை சுரேஷ்பாபு அவர்கள் தலைமையில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முட்டவாக்கம் ஊராட்சி வளர்ச்சி குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பின்பு முன்களப் பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தெய்வாணை சுரேஷ் பாபு அவர்கள் கலந்து கொண்டு தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்து தெரிவித்து பொங்கல் பரிசு வழங்கினார்.
இந்நிகழ்வில் துணைத்தலைவர் வேண்டா கோபால் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments