Breaking News

தைப்பூசம் முன்னிட்டு குமரகோட்டம் முருகன் கோயில் வாசலில் கற்பூரம் ஏற்றி கோபுர தரிசனம் செய்யும் பக்தர்கள்

 காஞ்சிபுரம்

தைப்பூசம் முன்னிட்டு மூடப்பட்ட காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் வாசலில் கற்பூரம் ஏற்றி  பக்தர்கள் கோபுர தரிசனம் செய்தனர். 

தமிழ் கடவுள் முருகப் பெருமானின் முக்கிய விழாவாக கொண்டாடப்படுவது தைப்பூசம் திருவிழா, தைப்பூசம் திருவிழாவையொட்டி அனைத்து முருகன் கோவில்களுக்கும் சென்று பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழக அரசு மக்கள் அதிகம் கூடும் இடங்களில்  கண்டறிந்து தடை விதிக்க உத்தரவிட்டுள்ளது.

தைப்பூசம் விழாவையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் கூடுவார்கள் என்பதால் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கந்தபுராணம் அரங்கேற்றிய காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில்,

குன்றத்தூர் முருகன் கோவில் இளையனார் வேலூர் முருகன் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து அனைத்து முருகன் கோவில்களும் மட்டும் இல்லாமல் அனைத்து வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தைப்பூசம் விழாவையொட்டி வழிபாட்டு நடைமுறையை மாற்ற முடியாத பக்தர்கள் காலையிலேயே  காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில் வாசலுக்கு வந்து தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி கோபுரத்தை தரிசித்து வணங்கி விட்டு செல்கின்றனர்.

மேலும் காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் வெளி மாநிலம் வெளி மாவட்ட பக்தர்கள் வேதனையுடன் கோவில் கோபுரத்தை தரிசித்துவிட்டு திரும்பிச் சென்று வருகின்றனர்.

No comments

Thank you for your comments