Breaking News

ஒமைக்ரான் சாதாரண ஜலதோசம் அல்ல..! டாக்டர் சவுமியா சுவாமிநாதன்

 நியூயார்க், ஜன.5-

டெல்டா உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்றுகளை ஒப்பிடும்போது ஒமைக்ரானின் பாதிப்பு தன்மை குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உலக அளவில் வேகமாகப் பரவி வருகிறது. டெல்டா வைரசை விட இந்த வைரஸ் வேகமாக பரவுவதால், நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுகின்றன. இந்த வைரஸ் தொடர்பான ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. டெல்டா உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்றுகளை ஒப்பிடும்போது ஒமைக்ரானின் பாதிப்பு தன்மை குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த தகவல் ஆறுதல் அளித்தாலும் ஒமைக்ரான் வைரசை சாதாரணமாக நினைத்துவிடக்கூடாது என உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்  கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  ஒமைக்ரான் தொற்று சாதாரண ஜலதோஷம் அல்ல. சுகாதார கட்டமைப்புகள் நம்மிடம் அதிகமாக இருக்கலாம். ஆனால் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை பரிசோதித்து கணிகாணிப்பது முக்கியம். ஏனெனில், தொற்று பரவல் திடீரென எழுச்சி பெறக்கூடும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


No comments

Thank you for your comments