Breaking News

கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் ஆட்சியர் ஆர்த்தி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கில் நடைபெற்ற 73-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப. அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கில்  இன்று (26.01.2022) நடைபெற்ற 73-வது குடியாசு தின விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப. அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 25 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார்.

மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, போக்குவரத்து துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, மற்றும் பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 228 அரசு அலுவலர்களுக்கும், 25 ஆண்டுகள் பணி முடித்தமைக்கான 5 நபர்களுக்கும் நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கி சிறப்பிக்கபட்டது.

இந்நிகழ்ச்சியின் போது காவல் துறை சரக துணைத் தலைவர் திருமதி.சத்தியபிரியா இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ம.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.பன்னீர்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து இந்திய திருநாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் ஆகியோரின் தியாகங்களைப் போற்றிப் பாராட்டி, பெருமைப் படுத்துகின்ற வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள காந்தியடிகள் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்களால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்றுப் பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகளின் வீடுகளுக்கு சென்று வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் மூலம் அவர்களுக்கு கதர் ஆடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

No comments

Thank you for your comments