செயின் பறிப்பு மற்றும் பணம் பறிப்பு வழக்கில் 3 பேர் கைது...
கோவை :
கோவை மாவட்டம் ஆர்எஸ் புரம் பி2 புரூக் பீல்டு ரோடு சிரியன் சர்ச் அருகில் உள்ள ரயில்வே காம்பவுண்ட் அருகில் செயின் பறிப்பு மற்றும் பணம் பறிப்பு குற்றச் சம்மந்தமாக கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் உத்தரவின் பேரில், கோவை மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு) ஜெயசந்திரன் மேற்பார்வையில், கோவை மாநகர உதவி ஆணையர் உக்கடம் சரகம் (பொறுப்பு ஆர்,எஸ் புரம் சரகம்) வீரபாண்டியன் தலைமையில், பி 2 புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி பரிமளாதேவி மற்றும் உதவி ஆய்வாளர் நாகராஜ், தனிப்படை தலைமைகாவலர் 719 சுரேஷ், காவலர் 2881 சாகுல் ஹமீது ஆகியோர்களுடன் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் குற்றவாளிகள்
1. முருகமல்லுசாமி (எ) முருகன் வயது 31, த/பெ சன்னாசி, க.எண் 1/155, கிழக்கு தெரு, வைப்பார் கிராமம், விளாத்திகுளம் தாலுக்கா, தூத்துக்குடி, மாவட்டம்,
2. சமித் அப்ரிடி (எ) சயித் வயது19, த/பெ சலீம், வார்டு எண் 13 டி,டி,குளம், உத்தமபாளையம் (தாலுக்கா), கம்பம், தேனி மாவட்டம்,
3. திருமுருகன் (எ) முருகன், வயது 19 த/பெ பாண்டியன், க எண் 37,1 அக்ராகாரம் வீதி, ஜெயமங்களம் அஞ்சல், பெரியகுளம் தாலுக்கா, தேனிமாவட்டம், தற்போதைய முகவரி க.எண் 117 சபரி இல்லம், கணபதி புதூர் 3 வது வீதி, கணபதி, கோவை,
ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 4 பவுன் செயின், 3 செல்போன்கள், பணம் ரூ.4,650/- மற்றும் இருசக்கர வாகனம், கத்தி, கைப்பற்றி குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments