246 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும் 8 தங்கம் வழங்கல்
காஞ்சிபுரம், ஜன.20-
உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2019 ஜூன் மாதம் வரை திருமணமானவர்கள் விண்ணப்பித்த மனுக்களின் அடிப்படையில் அரசின் திருமண உதவித் தொகையாக ரூபாய் 50,000 மற்றும் 8 கிராம் தங்கமும் 246 பயனாளிகளுக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் உத்திரமேரூர் ஒன்றிய குழு உறுப்பினரும் உத்திரமேரூர் ஒன்றிய கழகச் செயலாளருமான கெ.ஞானசேகரன் அவர்களும் சாலவாக்கம் ஒன்றிய கழக செயலாளர் ஜி.குமார், ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன், ஒன்றிய குழு துணை தலைவர் வசந்தி குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா. நாகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் ம.ஏழுமலை, உத்திரமேரூர் பேரூர் கழக செயலாளர் என்.எஸ்.பாரிவள்ளல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பெ.சசிகுமார், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுமதி குணசேகரன், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஒன்றிய மற்றும் கிளை கழக நிர்வாகிகள் துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பொதுமக்களும் இதில் திரளாக கலந்து கொண்டனர்.
🔥Also Read வேலூர் வட்டார போக்குவரத்து துறையில் விலைபோகும் அதிகாரிகள்!
No comments
Thank you for your comments