Breaking News

பிப்ரவரி 1ம் தேதி முதல் இரவில் குளிர் அதிகரிக்க வாய்ப்பு

சென்னை:

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் நாளை முதல் வருகிற 2ம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதத்தில் குளிர் அதிகமாக இருக்கும். பின்னர் இது படிப்படியாக குறையத் தொடங்கும். ஆனால் தற்போது அவ்வப்போது மேக மூட்டம் காரணமாக சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

பகல் நேரங்களில் மந்தமாகவும் இரவு சற்று சூடாகவும் இருந்து வருகிறது. இது வரும் நாட்களில் காற்றின் திசை மாற்றம் காரணமாக இரவு நேரத்தில் வெப்ப நிலை குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே நாளை முதல் வருகிற 2ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வெப்பநிலை அதிகபட்சம் 30 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சம் 25 டிகிரி செல்சியசும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தனியார் வானிலை ஆய்வாளர்கள் பிப்ரவரி 1ம் தேதி முதல் இரவு நேரங்களில் மீண்டும் குளிர் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

வடக்கில் இருந்து குளிர் மற்றும் வறண்ட காற்று தமிழகத்தை நோக்கி நகர்வதாக கூறியுள்ளனர்.

இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர்  கூறும் போது, 

“அடுத்த வாரம் காற்றின் திசை மாறக்கூடும். பிப்ரவரி 1ம் தேதி முதல் வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் குளிர் அதிகரிக்கும். பிப்ரவரி 5ம் தேதி வரை கடுமையான குளிர் நீடிக்கும். சென்னை புறநகர் பகுதிகளில் வெப்ப நிலை 18 டிகிரி செல்சியஸ் வரை கூட இருக்கலாம். பிரப்வரி 5ம் தேதிக்கு பிறகு வெப்பநிலை சிறிது உயரும். பிப்ரவரி நடுப்பகுதியில் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்றார்.

Click here வானிலை தகவல் இணையதளம்

Click here  கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையின் அளவு

No comments

Thank you for your comments