தமிழக மீனவர்களின் 105 படகுகளை ஏலம் விட இலங்கை அரசு முடிவு!
யாழ்ப்பாணம்:
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 105 படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. 5 நாட்களுக்கு இந்த ஏலம் நடைபெறும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது அவர்களை தாக்குவதையும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
இந்நிலையில் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 105 படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இந்த ஏலம் பிப்ரவரி 7ம் தேதி முதல் 5 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 7ம் தேதி யாழ்ப்பாணம் காரைநகரில் 65 படகுகளையும், பிப்ரவரி 8ம் தேதி காங்கேசன்துறையில் 5 படகுகளையும், பிப்ரவரி 9ம் தேதி கிராஞ்சியில் 24 படகுகளையும், பிப்ரவரி 10ம் தேதி தலைமன்னாரில் 9 படகுகளையும், பிப்ரவரி 11ம் தேதி கற்பிட்டியில் 2 படகுகளையும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்படும் நிலையில், இலங்கை அரசின் நடவடிக்கையால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தி, தங்கள் படகுகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments