Breaking News

பெண்கள் ஒற்றுமை சுய உதவிக்குழு கூட்டமைப்பிற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிSkill Development Training Program for SHG

இந்திய அரசின் மத்திய வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் பெண்கள் ஒற்றுமை சுய உதவிக்குழு கூட்டமைப்பிற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி மணிப்பூரின் சுராசந்த்பூரில் உள்ள சோத்தே கிராமத்தில்  தொடங்கப்பட்டது.

மணிப்பூரில் உள்ள சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த பயிற்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் திரு தோங்க்கோலுன் பாய்டே நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். டிம்டாய்லாங்க் கிராமத்தில் உள்ள மெர்சி சுய உதவிக்குழுவால் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சோத்தே கிராமத்தின் தலைவர் திரு தயோஜத்ரா சோத்தேதேவாலய பெரியவர்கள்சிடிசிஆர்எம்எஸ் சுராசந்த்பூர் அதிகாரிகள் மற்றும் சுய உதவிக்குழு கூட்டமைப்பினர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.


மாநில ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள நெசவாளர் சேவை மையத்துடன் கலந்தாலோசித்து 2022 ஜனவரியில் இருந்து மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல் பயிற்சி நடத்தப்படும்.

No comments

Thank you for your comments