Breaking News

திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகள் இடிந்து விபத்து

சென்னை

திருவொற்றியூர் கிராமத்தெரு அருகே அரிவாகுப்பத்தில் இருந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இன்று காலை திடீரென இடிந்து விழுந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.


சென்னையை புறநகர் பகுதியான திருவெற்றியூரில்  4 மாடிகள் கொண்ட 336 குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ளன. 1998 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த வீடுகள், தேனாம்பேட்டை திருவொற்றியூர் உள்பட சென்னை மாநகரின் பல்வேறு பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் இந்த வீடுகளில் கடுமையான விரிசல் ஏற்பட்டதாக இங்குள்ள பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருந்தனர். இதையடுத்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் சிறுசிறு பணிகளை மேற்கொண்டிருந்தனர். நேற்று இரவு 24 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு லேசாக விரிசல் ஏற்பட்டது. அந்த பகுதியில் இருக்கும் திமுக பகுதி செயலாளரிடம் பொதுமக்கள் இது குறித்து புகார் கூறினர்.

இதையடுத்து இன்று காலை அந்த கட்டிடத்தின் உள்ளே இருந்தவர்கள் அவசர அவசரமாக  வெளியேற்றப்பட்டனர். காலை பத்து முப்பது மணி அளவில் திடீரென பெரிய சத்தத்துடன் அந்த வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் யாருக்கும் உயிர் இழப்பும் இல்லை என தெரிகிறது. இருப்பினும் ஒரு குழந்தை மட்டும் காணவில்லை என கூறப்படுகிறது.

எனினும் 50 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட வீடுகள் இன்றும் வலிமையாக இருக்கும் போது, குடிசைமாற்று வாரிய வீடுகள் அடிக்கடி இடிந்து விழுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது

No comments

Thank you for your comments