முதியோர் இல்லத்தில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா - இபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு
சென்னை,
சென்னை சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையில் உள்ள ஏழைகளின் சிறிய சகோதரிகளின் முதியோர் இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில், அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா இன்று நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம், பங்கேற்று பேசியதாவது,
எம்.ஜி.ஆர் காலத்தில்தான் கிறிஸ்துவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது, ஜெயலலிதா காலத்தில் ஜெருசேலம் பயணத்திற்கான உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
மேலும், தவறு செய்தவர்கள் திருந்தி வரும்போது அவர்களை ஏற்றுக்கொள்வதுதான் சிறந்தது என தினமலர் நாளிதழில் வந்த இயேசுபிரான் கதையை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் பேசினார்.
கிறிஸ்துமஸ் விழாவில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று பேசினார், அவர் பேசுகையில்:
கிறிஸ்துமஸ் வருகின்றது என்றாலே, அனைவருக்கும் உற்சாகம் வந்துவிடும்.
தங்கள் வீட்டில், விண்மீன்கள் செய்து,வண்ண விளக்குகளால் அலங்கரிப்பார்கள். கிறுஸ்துமஸ் மரம் வைப்பார்கள். நண்பர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்வார்கள்.டிசம்பர் 24 ம் தேதி நள்ளிரவு உலகில் உள்ள மக்கள் அமைதியுடனும், சகோதாத்துவத்துடன், ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் எனச் சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். சீசருக்கு பின்னால் என்றென்றும் துணையாக இருப்பேன் தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே கல்வியும், நவீன மருத்துவத்தையும் அறிமுகப்படுத்திய கிறிஸ்துவர்களாகிய உங்களுக்கு அதிமுக என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்று கூறி நன்றி தெரிவிக்கிறேன்.
ஜேசிடி பிரபாகரன் கூறும்போது,
இந்த ஆலயத்தில் 67 முதல் 107 வயது வரை உள்ளவர்கள் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என அன்பு கட்டளையிட்டார். நானும், ஒருங்கிணைப்பாளரும், அதிமுக முன்னோடிகளும் நிச்சயமாக நிகழ்ச்சியில் பங்கு பெறுவோம் என்று சொல்லி உங்களோடு, நாங்களும் பங்கு பெற்று மகிழ்ச்சி அடைகிறோம். அதிமுகவை பொறுத்தவரையில் ஜாதியும் கிடையாது, மதமும் கிடையாது ஏழைகளுக்காக உதவ கூடிய இயக்கம். ஜெயலலிதா இந்த கிறிஸ்து பள்ளியில் தான் படித்தார்கள்.
ஆகவே, இந்த கிறிஸ்துவ பள்ளியில் படிக்கும் மாணவ செல்வங்கள் ஒழுக்கம் நிறைந்தவர்களாக வருவார்கள் என்று எல்லோராலும் பாராட்டபடுகின்ற மதம் கிறிஸ்துவ மதம். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று ஏழைகளின் சிறிய சகோதரிகளின் முதியோர் இல்லத்தில் கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. #HappyChristmas pic.twitter.com/1VXu5JoFaY
— AIADMK (@AIADMKOfficial) December 20, 2021
No comments
Thank you for your comments