Breaking News

காஞ்சிபுரம் ஸ்ரீவிளக்கொளிப் பெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழா

காஞ்சிபுரம்,டிச.8-

காஞ்சிபுரம் விளக்கொளிப்பெருமாள் கோயிலில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை தெப்பத்திருவிழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் பெருமாள் அவதரித்த கார்த்திகை மாதம் திருவோண நட்சத்திரத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

மழையின்மை காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு தெப்பத்தில் போதுமான தண்ணீர் இல்லாததால் தெப்பத் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு கனமழை காரணமாக தெப்பத்தில் தண்ணீர் நிரம்பியிருந்ததால் தெப்பத்திருவிழா நடைபெற்றது.

ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் விளக்கொளிப்பெருமாள், மரகதவல்லித்தாயார், தேசிகன் சுவாமிகள் ஒன்றாக இணைந்து சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் 7 சுற்று வலம் வந்தனர். வாண வேடிக்கைகளும் நடந்தன.

இதனையடுத்து சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன. விழாவில் திருக்கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் பரந்தாமக்கண்ணன் ஆகியோர் உட்பட ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.


 

No comments

Thank you for your comments