Breaking News

சுகாதார நிலையம் நலவாழ்வு மையங்களில் பணி புரிய வாய்ப்பு

ஈரோடு, டிச.7-

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டுவரும் துணை சுகாதார நிலையம் (HWC–HSCs) நலவாழ்வு மையங்களில் 65 பல்நோக்கு சுகாதார பணியாளர்கள்  / சுகாதார ஆய்வாளர்கள் நிலை- II (ஆண்) (Multipurpose Health Worker (Male) Health Inspector Grade-II)  மற்றும் 123 இடைநிலை சுகாதார பணியாளர்கள் (Midlevel Health Care Provider) ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு கடந்த 01.12.2021 அன்று ஈரோடு மாவட்ட   https://erode.nic.in/notice_category/recruitment/ என்ற வளை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. 

மேலும், விண்ணப்பங்களை மேற்கண்ட வளை தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் நிர்வாகசெயலர் / துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள், மாவட்ட நல்வாழ்வு சங்கம், திண்டல், ஈரோடு என்ற முகவரியில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். 15.12.2021 மாலை 5.00 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த சான்றிதழ் நகல்களுடன் நிர்வாக செயலர் / துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், திண்டல், ஈரோடு அலுவலகத்தில் 15.12.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments