Breaking News

சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி!-

சென்னை, டிச.30-

சென்னையில் மீண்டும் கொரானோ தொற்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது. சென்னை அசோக் நகர் 19வது தெருவில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்தத் தெரு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தெருவுக்குள் யாரும் செல்ல வேண்டாம். அங்கிருந்து யாரும் வெளியேற வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது.  சாலைகளின் குறுக்கே தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

தென் ஆப்பிரிக்காவில் நவம்பர் மாதம் 24ம் தேதி முதன்முதலாக தென்பட்ட ஒமைக்ரான் வைரஸ், ஒரே மாதத்தில் 116 நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவியுள்ளது. இந்தியாவில் டிசம்பர் 2&ம் தேதி நுழைந்தது.

இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை தற்போது 781 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாக டெல்லியில் 238 பேருக்கும், மராட்டிய மாநிலத்தில் 167 பேரும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே 34 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ள நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கு இந்த தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தொற்றுக்கள் எல்லாம் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்த விமானப் பயணிகளால் ஏற்பட்டது எனக் கூறப்பட்டது. ஏற்கெனவே இங்கு பரவிய தொற்றுக்களில் இருந்து சமதளப்பரவல் முறையில் புதிய தொற்று பரவல் இல்லை என்று கூறப்பட்டது.

கொரோனா தொற்று சென்னையில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதுவும் சமதளப்பரவல் முறையில் கொரானோ தொற்று பரவத் தொடங்கியுள்ளது. சென்னை அசோக் நகர் 19வது தெருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவருக்கு கொரானா தொற்று கண்டுபிடிக்கப் பட்டது அடுத்தடுத்து மேலும் சிலருக்கு தொற்று உறுதியானது.

இதை அடுத்து அந்த தெருவில் 83 பேருக்கு மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. அதில் அந்த தெருவில் மட்டும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது, இதனால் அந்த தெரு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டது.

நுழைவாயிலில் தடுப்பு வேலிகள் அமைத்து உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. அந்த பகுதி முழுவதும் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments

Thank you for your comments