திருநின்றவூரில் கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் கஞ்சா வியாபாரம் அமோகம்
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் சென்னைக்கு அருகாமையில் உள்ள திருநின்றவூர் சுதேசி நகரில் வசித்து வரும் பிரபல கஞ்சா வியாபாரி நாதன் அவருக்கு துணையாக காஞ்சனா ஆகியோர் தொடர்ந்து கஞ்சா வியாபாரத்தில் கொடிகட்டி பரந்தனர்.
இவர்கள் கட்டுக்கடங்காமல் இருந்த நிலையில் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து கஞ்சா வியாபாரம் மற்றும் ரவுடிசம் செய்பவர்களை அதிரடியாக கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவின் பெயரில் நேற்றைய முன்தினம் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து அவரது கூட்டாளியான காஞ்சனாவை நேற்று கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட போது காவல்துறையினர் அவரை பிடித்து ஆவடி மாநகராட்சியில் கொரானோ டெஸ்ட் எடுத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது இவர்களால் பட்டாபிராம் இந்து கல்லூரி சேக்காடு அணைக்கட்டு சேரி பிரகாஷ் நகர் நடுகுத்தகை செவ்வாப்பேட்டை வேப்பம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிக படியாக கஞ்சா விற்பனை செய்வதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இவர்களை யார் என்று கண்டுபிடித்து களையெடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றன. மாணவர்கள் சீரழிந்து போகாமல் இருக்க இவர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்
No comments
Thank you for your comments