சட்டப்பேரவையின் பொதுக்கணக்கு குழுவினர் காஞ்சிபுரத்தில் ஆய்வு
காஞ்சிபுரம்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர் .
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் புதுக்கணக்கு குழுவின் தலைவராக ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டு அதன் உறுப்பினர்களாக பல்வேறு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று இக்குழுவினர் திருவள்ளூர் மாவட்டத்திலும், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இக்குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜஹவர்லுல்லா , சிந்தனைசெல்வன் , ராஜா, பிரகாஷ் மற்றும் மாரிமுத்து ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
முதலாவதாக மாங்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஜனனி நகர் , சக்திகணபதி நகர் உள்ளிட்ட மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அங்கு வசிக்கும் பொதுமக்களை சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிந்தனர்.
அதன்பின், புவனேஸ்வரி நகர் பகுதியில் அடையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் நீர் வள ஆதார துறை சார்பில் வைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சி ஆகியவற்றை பார்வையிட்டனர்.
குன்றத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் உரையாடினார். இதனைத் தொடர்ந்து மிடாஸ் மதுபான தொழிற்சாலை மற்றும் பிள்ளைபாக்கம் தனியார் அலுமினிய தொழிற்சாலையில் ஆகியவற்றில் உபயோகப்படுத்தப்பட்ட நீர் சுழற்சி முறை குறித்து கேட்டறிந்தனர்.
படப்பையில் செயல்பட்டுவரும் கால்நடை மருத்துவமனை ஆய்வு மேற்கொண்டு அதற்கான புதிய கட்டிடம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதூர் அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே குறைகளை கேட்டறிந்தனர்
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், ஊரக முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி ஆகியோர் உடனிருந்தனர்
No comments
Thank you for your comments