கள்ள தொடர்பில் தந்தை .... நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்த மகன்
தருமபுரி, டிச.7-
தருமபுரியை அடுத்த கடகத்தூர் பகுதியை சேர்ந்த கிஷோர்(29) என்பவர் தனது தந்தையின் கள்ள தொடர்புக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
தருமபுரியை அடுத்த கடகத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர்(29). இவர் தன் தாயார் தமிழ்செல்வி(47) உடன் வாழ்ந்து வருகிறார். இவரது தந்தை ஜி.சண்முகம்(59) என்பவர் கள்ள தொடர்பால் தன் தாயையும், தன்னையும் கஷ்டபடுத்துவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தருமபுரியை அடுத்த கடகத்தூர் பகுதியை சார்ந்த கிஷோர்(29) கூறியதாவது,
எனது அம்மா தமிழ்செல்வியும்(47), என்னையும், எனது தந்தை ஜி.சண்முகம்(59), தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவரும் அவரது கள்ளகாதிலி பிருந்தா(39) ஆகிய இருவரும் சேர்ந்து 25 இலட்சம் பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டனர்.
![]() |
சண்முகம் - பிருந்தா |
எனது தந்தை என் பேரில் வங்கியில் கடன் வாங்கியுள்ளார் எனக்கு தெரியாமல் அவரது கள்ளகாதலி பிருந்தா அவர்களுக்கு செலவழித்துள்ளார். இதை அறிந்த என் தாயார் தமிழ்செல்வி கேட்க சென்ற போது கடனுக்கான தொகையை கூட செலுத்தாமல் தேவையற்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
என் தாத்தா பாட்டி சொத்துக்களை இரண்டாவது கள்ளக்காதலி பேச்சை கேட்டுகொண்டு விற்றுவிட்டார். இதை கேட்ட என்னை ஆள் வைத்து என்னை அடித்தார் இது ஊருக்கே தெரியும்
எங்களுக்கு மிகுந்த மனஉளைச்சலாக உள்ளது. எங்களுக்கு நீதி வேண்டும் நாங்கள் செலவு செய்த தொகைய பெற்று தரவும் என் தாயை ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்ததற்காக அவர் மீதும், கள்ளத்தொடர்பில் உள்ள பிருந்தா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிஷோர் மற்றும் அவரது தாயார் தமிழ்செல்வி கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments
Thank you for your comments