காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மகா சண்டி யாகம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அனுகிகத்துடன் மகா சண்டி யாகம் சிறப்பாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் யாக சத்திர குலம் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சார்பில் ஸ்ரீகாஞ்சி சண்டிஹோம அறக்கட்டளை ஸ்ரீ கல்யாண காமாட்சி அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ சங்கர மடம் பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன் மகா சண்டி யாகம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஆல் இந்தியா சாது செட்டி 24 மனை தெலுங்கு செட்டியார் சங்கத் தலைவர் பெங்களூருவை சேர்ந்த டி.பாலகிருஷ்ணா தலைமை தாங்கிய சிறப்பாக செய்திருந்தார்.
இதில் மலர்கள் காய் கனிகள் இனிப்பு வகைகள் பொறந்த கனிகள் மற்றும் மாங்கல்யம் உள்ளிட்டவர்கள் இந்த சண்டி யாகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்று தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.
இதைதொடர்ந்து சுமங்கலி பூஜை . கன்னியா.பூஜை. வடுக பூஜை போன்ற பூஜைகளும் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மாங்கல்யம் மஞ்சள் குங்குமம் ரவிக்கை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாட்டினை சங்கத்தலைவர் பாலகிருஷ்ணா விழா குழுவினருடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தார்.
இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு காஞ்சி காமாட்சி அம்மனின் அருளைப் பெற்றுச் சென்றனர்
No comments
Thank you for your comments