வெளிநாடுகளை வாழவைத்து உள்ளூர் விவசாயத்தை அழிக்கும் ஸ்டார்ச் நிறுவனம்
தருமபுரி:
இந்தியாவில் மரவள்ளிக்கிழங்கு மற்றும் மக்காச்சோளம் (சோளம்) ஆகியவற்றைப் பயன்படுத்தி சர்வதேச தரத்திற்கு இணையாக மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச், மரவள்ளிக்கிழங்கு சாகோ, மக்காச்சோள ஸ்டார்ச் மற்றும் அனைத்து வகையான மாற்றியமைக்கப்பட்ட மாவுச்சத்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைந்த மிகப்பெரிய யூனிட் வரலக்ஷ்மி ஸ்டார்ச் இண்டஸ்ட்ரியஸ் நிறுவனம்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் சாமியாபுரம் கூட்டுரோடு பகுதியில் இயங்கி வரும் வரலக்ஷ்மி ஸ்டார்ச் இண்டஸ்ட்ரியஸ் நிறுவனம்.
உயர் தர மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச் தயாரிப்பதற்காக 1995 ஆம் ஆண்டு கிராமப்புற விவசாய அடிப்படையிலான நடுத்தர அளவிலான ஏற்றுமதி சார்ந்த தொழிலாக நிறுவனம் நிறுவப்பட்டது. மரவள்ளிக்கிழங்குகள் மற்றும் மக்காச்சோள கர்னல்களில் இருந்து மரவள்ளிக்கிழங்கு சாகோ (சபுதானா), சோள மாவுச்சத்து மற்றும் மாற்றியமைக்கப்பட்ட மாவுச்சத்து ஆகியவற்றை உற்பத்தி செய்ய தொழில் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
இந்த நிறுவனம் 25 நாடுகளுக்கு மேல் தென்னாப்பிரிக்கா, டென்மார்க், ஜப்பான், ஜெர்மனி, நெதர்லாந்து, மலேசியா, இலங்கை, மெக்சிகோ, சவுதி அரேபியா, தைவான், நியூசிலாந்து, கனடா, நார்வே, துபாய், ஓமன், ஜோர்டான், நேபாளம், பங்களாதேஷ், எகிப்து, கத்தார், ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஸ்வீடன் முதலியன, இந்தியாவில் முதன்முறையாக, சுமார் 25,000 மெட்ரிக் டன் அதன் மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று பெருமை பீத்திக்கொள்ளும் இந்த நிறுவனம் தனது சொந்த மண்ணில் விவசாயத்தை நம்பி வாழும் விவசாயிகளையும், விவசாய மண்ணையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.....
இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கிழங்கு கழிவு நீரை அவ்வபோது ஆற்றில் கலந்துவிடுவதால் நெற்பயிர்கள் கருகும் சூழல் உருவாகிறது என்று ஆரம்ப காலகட்டத்தில் விவசாயமாக்களிடமிருந்து இந்த நிறுவனத்தின் மீது பல்வேறு புகார்கள் வந்துகொண்டே இருந்தன.
பிறகு நிறுவனத்தை சுற்றியுள்ள ஏழை விவசாயிகளின் சுமார் 50 ஏக்கர் நிலங்களை வாங்கி விதை போட்டு சீமைக்கருவேலமரங்களை வளர்த்து வருகிறது இந்த நிறுவனம்.
இதற்கு முக்கிய காரணம் கழிவுநீர்களை இந்த சீமைக்கருவேல மரத்துடைய வேர்கள் ஈர்த்துக்கொள்ளும் என்ற நோக்கில் இது போன்ற விபரீதமான செயல்களில் இந்த வரலக்ஷ்மி நிறுவனம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சீமைக்கருவேல மரத்தால் அருகில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள பயிர்கள் கருகிப்போகிறது. அதுமட்டுமல்லாமல் கிணற்றின் நீர், குடிநீராகயிருந்த நிலையில் தற்போது அது கழிவு நீராக மாறியுள்ளது.
இதனால் குடிப்பதற்கு அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் சுற்றியுள்ள 5000 ஆயிரம் ஏக்கர் விவசாயம் நிலம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் வேதனையாக உள்ளனர்.
அதுமட்டுமின்றி நிறுவனத்திற்கு பின்னால் இருக்கும் ஏரியில் கிழங்கு கழிவு நீரை கலந்துவிடுவதால் ஏரியில் இருக்கும் மீன்கள் சில நேரத்தில் இறந்து போகின்றனர்.
இப்படி பல்வேறு வகையில், இங்கே உள்ள விவசாய மக்களுக்கு பல்வேறு இன்னலைகளையும், விரோதங்களையும், வரலக்ஷ்மி ஸ்டார்ச் நிறுவனம் செய்து வருகிறது.
இந்த நடவடிக்கை குறித்து ஒரு அதிகாரிகளும் இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை, மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியமும் கண்டுகொள்ளவில்லை என்பதை நினைக்கும்போது அதிகாரிகள் இந்த நிறுவனத்திற்கு சாதகமாக இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.
தயவு கூர்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யாதர்சனி அவர்கள் இந்த நிறுவனத்தை பார்வையிட்டு இந்நிறுவனம் வளர்த்து வரும் சீமைக்கருவேல மரங்களை அழித்து விவசாயத்தை காப்பற்றவேண்டும் என்றும், கழிவு நீர் சுத்திகரித்து அகற்றும் முறை பின்பற்றப்டுகின்றனவா என்றும் முறையாக ஆய்வு செய்யவேண்டும் என்று பாப்பிரெட்டிப்பட்டி சமூக ஆர்வலர்களும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அப்பாவி விவாசாயிகளின் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவிமடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்...
No comments
Thank you for your comments