Breaking News

நெல்லை பள்ளி விபத்து: தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம்

நெல்லை, டிச. 20-

3 மாணவர்கள் உயிரிழக்கக் காரணமான திருநெல்வேலி தனியார் பள்ளி விபத்து தொடர்பாக தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி எஸ்.என். ஹைரோடு பொருட்காட்சி திடல் எதிரே அமைந்துள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து அன்பழகன், சுதீஷ், விஸ்வரஞ்சன் ஆகிய 3 மாணவர்கள் பலியானார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பள்ளி தாளாளர் செல்வகுமார்,  தலைமை ஆசிரியை பெர்சிஸ் ஞானசெல்வி,  கட்டிட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து பள்ளியின் கட்டிட விபத்து குறித்து உதவி கலெக்டர் தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார்.

இந்நிலையில் நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக தலைமை ஆசிரியர் மற்றும் 3  உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனிடையே பள்ளியில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முதற்கட்ட ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கோட்டாட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு ஆட்சியரிடம் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

No comments

Thank you for your comments