கடந்த 24 மணி நேரத்தில் 6,987 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 141.37 கோடியைக் கடந்தது
கடந்த 24 மணிநேரத்தில் 32 லட்சத்திற்கும் அதிகமான டோஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன
மீட்பு விகிதம் தற்போது 98.40% ஆக உள்ளது, இது மார்ச் 2020 க்குப் பிறகு அதிகபட்சமாக உள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் 6,987 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன
இந்தியாவின் ஆக்டிவ் கேஸ்லோட் தற்போது 76,766.
கடந்த 42 நாட்களில் வாராந்திர நேர்மறை விகிதம் (0.62%) 1%க்கும் குறைவு
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 141.37 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.
இந்தியாவில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 76,766.
கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து தற்போது 0.22 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.
Click here to more view 👆 about LVS EYE Hospital Facility |
குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.40 சதவீதம்; 2020 மார்ச் மாதத்திற்கு பின் இது மிக அதிகமான அளவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 7,091 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,42,30,354 என அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 6,984 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் (0.74%), இது கடந்த 83 நாட்களாக 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
வாராந்திர பாதிப்பு விகிதம் (0.62%) ஆகும். இது கடந்த 42 நாட்களில் 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
இதுவரை மொத்தம் 67.19 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
மஹாராஷ்ட்ரா, தில்லி, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 422 பேரிடம் கண்டறியப்பட்டது.
இவர்களில்130 பேர் வீடு திரும்பியுள்ளனர்/ குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 108 பேருக்கு தொற்று ஏற்பட்டு 42 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 42 நாட்களில் 1 சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 0.62 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 0.74 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 83 நாட்களாக 2 சதவீதத்திற்குக் கீழே 118 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.
தடுப்பூசி டோஸ்கள்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 148.37 கோடிக்கும் மேற்பட்ட (1,48,37,98,635) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 17.90 கோடிக்கும் மேற்பட்ட (17,90,54,941) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.
No comments
Thank you for your comments