21 ஆண்டுகளுக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து
சென்னை:
21 ஆண்டுகளுக்கு பின்னர், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், சண்டிகரைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஹானர்ஸ் கவுர் சந்த், பிரபஞ்ச அழகியாக (MISS UNIVERSE) தேர்வானார்.
லாரா தத்தாவுக்கு பின்னால் பிரபஞ்ச அழகியான சந்த்துக்கு உலகமெங்கும் வாழ்த்துக்கள் குவிகிறது
2021 ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் (MISS UNIVERSE) பட்டத்தை இந்தியாவின் ஹர்னாஸ் கவுர் சாந்து வென்றார்.
70ஆவது மிஸ் யுனிவர்ஸ் போட்டி இஸ்ரேலின் ஈலாட் நகரில் நடைபெற்றது.
மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் தென்னாப்பிரிக்கா, பராகுவே உள்ளிட்ட 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியர்களை வீழத்தி பஞ்சாபைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார்.
தென்னாப்பிரிக்கா, பராகுவே உள்ளிட்ட 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியர்களை வீழத்தி பஞ்சாபைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார்.
ஹர்னாஸ் கவுர் சாந்துக்கு முன்னாள் மிஸ் யுனிவர்ஸான மெக்சிகோவின் ஆண்ட்ரியா பட்டம் சூட்டினார்.
முன்னதாக லாரா தத்தா 2000ம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெற்றி வாகை சூடிய நிலையில் 20 ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் ஹர்னாஸ் கவுர் சாந்துக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் கவுர் சந்து பேசியதாவது
உங்களுக்காக நீங்களே பேசுங்கள். உங்கள் வாழ்க்கையை வழி நடத்துபவர் நீங்கள் தான். உங்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது நீங்கள் தான். நான் என்னை நம்புகிறேன், அதனால்தான் இங்கே நிற்கிறேன்.
இயற்கை எப்படி அழிக்கப்படுகிறது என்பதை பார்க்கும் போது என் இதயம் உடைகிறது. அதற்கு காரணம் நமது பொறுப்பற்ற செயல்பாடுகள் தான். பேச்சை குறைத்து செயலில் தீவிரத்தை கூட்ட வேண்டிய நேரம் இது.
காரணம் நமது ஒவ்வொரு நடவடிக்கையும் இயற்கையை அழிக்கலாம் அல்லது காக்கலாம் என ஹர்னாஸ் கவுர் சந்து பேசினார்
பட்டம் வென்ற பின்னர் உலக அழகி, ஹர்னாஸ் கவுர் சந்து பேசிய வீடியோ காட்சி இணைக்கப்பட்டுள்ளது.
No better way to start the week than by hearing this… #MissUniverse #MissUniverse2021 #HarnaazSandhu #india
— anand mahindra (@anandmahindra) December 13, 2021
pic.twitter.com/moyhkhTudW
No comments
Thank you for your comments