முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரத பிரதம மந்திரியின் கல்விச் சலுகை - 2021-22
2021-2022-ஆம் கல்வி ஆண்டில் 60% மதிப்பெண்களுக்கு மேல் +2 அல்லது இளங்கலை படிப்பில் பட்டம் பெற்று முதலாம் ஆண்டு பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், பி.டெக், பி.எஸ்.சி. நர்சிங், பி.எஸ்.சி. விவசாயம், கல்வியியல் (பி.எட்.,) படிப்பு மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சட்டம் மற்றும் பல தொழிற்கல்விகள் படிக்கும் சிறார்கள் பாரத பிரதம மந்திரியின் கல்வி உதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆகின்றார்கள்.
இந்நிதியுதவி தற்போது உயர்த்தப்பட்டு முன்னாள் படைவீரரின் மகளுக்கு வருடத்திற்கு ரூ.36,000/- வீதமும், மகனுக்கு ரூ.30,000- வீதமும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் கல்விச் சலுகையினை அதிக அளவில் பயன் பெறும் பொருட்டு தற்போது கால அவகாசம் 31.12.2021 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதலால், முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு நேரில் வந்து உரிய அறிவுரையினை பெற்று www.ksb.gov.in என்ற இணைய தள முகவரியில் உரிய ஆவணங்களுடன் 31.12.2021க்குள் பதிவு செய்து பயன்பெறுமாறும், மேலும் அவ்வாறு பதிவு செய்த விவரத்தினை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அரசு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here அதிகாரப்பூர்வ இணையதளம் www.ksb.gov.in
No comments
Thank you for your comments