Breaking News

காங்கிரஸ் பேரியக்கத்தின் 137- வது நிறுவன நாள் கொண்டாட்டம்

ஈரோடு:

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் காங்கிரஸ் பேரியக்கத்தின் 137- வது  நிறுவன நாள் கொண்டாடப்பட்டது.

இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட நிறுவன நாளான  நேற்று மொடக்குறிச்சி பகுதியில் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அதன் மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமையில் பொது மக்களுக்கு லட்டு வழங்கி 137-ஆவது ஆண்டு நிறுவன நாள் கொண்டாடப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி கிழக்கு வட்டார தலைவர் கதிர்வேல்,  தெற்கு வட்டார தலைவர்  ஈஸ்வரமூர்த்தி,  வடக்கு வட்டார தலைவர்  ரவி, மாவட்ட செயலாளர் பூவை ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



No comments

Thank you for your comments