மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் அனைவரும் வெளிநடப்பு
புதுடெல்லி, நவ.30:
குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று புதிய கூட்டத்தொடரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வன்முறைகளுக்கு 12 எதிர்க்கட்சிகளை அவைத்தலைவர் அவையிலிருந்து குளிர்கால கூட்டத்தொடர் முழுமைக்கும் தற்காலிக நீக்கம் செய்வதாக தரும் இந்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரினார்கள். அவர்களது கோரிக்கையை அவைத்தலைவர் ஏற்க மறுத்தார். அதைத்தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் நீங்கலாக மற்ற எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர் பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்களும் வெளிநடப்பு செய்தார்கள்.
மாநிலங்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியது.
மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுந்த ஒரு பிரச்சனையை எழுப்பினார்.
மாநிலங்களவை உறுப்பினர்களை விதி 256 எனக்கு தற்காலிக நீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்றுவது அப்பட்டமான விதிமீறல் ஆகும் மாநிலங்களவை விதி 753 ஒழுங்குமுறை பிரச்சனை ஒன்றை எழுப்ப விரும்புகிறேன் என்று கார்கே கூறினார்.
அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அவருக்கு அனுமதி மறுத்துவிட்டார்.
ஒழுங்குமுறை பிரச்சனை எழுப்ப விரும்பும் உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுமதி வழங்க வேண்டியதுதான் முறையாகும் ஆனால் எனக்கு அவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார்.
முறைதவறிய நடவடிக்கைக்காக உறுப்பினர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் தீர்மானத்தை அன்றே தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும்.
அதற்கு முன்னதாக உறுப்பினர் செய்த தவறுகள் குறித்து குறிப்பிட்டு அவரை அவையிலிருந்து வெளியேற்ற ஆணை பிறப்பிக்க வேண்டும் ஆனால் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. எனவே மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேரையும் தற்காலிக நீக்கம் செய்யும் தீர்மானத்தை ரத்து செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
அவைத் தலைவர் வெங்கையா நாயுடு மல்லிகார்ஜுன் கார்கே முன்வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து காங்கிரஸ், திமுக, ஆர் ஜே டி, இடதுசாரிக் கட்சிகள், ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் அவையில் அமர்ந்து இருந்தனர்.
சிறிது நேரம் கழித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டிரேக் ஓ பிரியன் எழுந்து பேசினார்.
அவையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் விரும்புகிறது.
சென்று மழைக்காலக் கூட்டத்தொடர் முழுமையும் உறுப்பினர்கள் நடவடிக்கைகளுக்கு அவர்கள் பொறுப்பு அல்ல ஆளுங் கட்சி எம்பிக்கள் தான் பொறுப்பு ஆவார்கள்.
அவையில் முறைதவறி நடந்ததற்காக உறுப்பினர்களை தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும் என்றால் முதலில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்பது பேரையும் அவைத்தலைவர் தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும். அதை செய்வதற்கு பதிலாக எதிர்க் கட்சி எம்பிக்கள் 12 பேரை அவைத்தலைவர் தற்காலிக நீக்கம் செய்து இருக்கிறார்.
எதிர்க் கட்சி எம்பிக்கள் 12 பேரையும் தற்காலிக நீக்கம் செய்து இருக்க கூடாது என்று ஓ பிரியன் பேசினார்.
இவ்வாறு பேசிவிட்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய வெளிநடப்பு செய்வதாக திருநாமம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறினார்கள் அவையில் இருந்து அவர்களும் வெளியேறினார்கள்.
எதிர்க்கட்சிகளின் முதல் குழு வெளியேறிய பிறகு தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஜி.கே. வாசன். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் கே. சி.ராமமூர்த்தி தங்கள் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்கள் குறித்து விளக்கினார்கள் ஆந்திர மாநில உறுப்பினர் விஜய சாய் ரெட்டி மாநிலத்துக்கு நிவாரண தொகுப்பு நிதியாக ரூ 1000 கோடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாநிலங்களவை நியமன உறுப்பினர் நரேந்திர ஜாதவ் புதிய உருமாறிய கரோனா வைரஸ் ஒமைக்ரான் அபாயம் குறித்து பேசினார்.
மழைக்காலக் கூட்டத்தொடரில் இறுதி நாளான ஆகஸ்ட் 11-ஆம் தேதி உறுப்பினர்களின் நடவடிக்கை குறித்து தான் குறிப்பிட்டதாக வெங்கையா நாயுடு செவ்வாயன்று குறிப்பிட்டார். அன்றே தவறு இழைத்த உறுப்பினர்களின் பெயர்களையும் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments