சாலைப் பணியை விரைந்து முடிக்க உத்தரவு
காஞ்சிபுரம், நவ.2-
காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறையில் சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்ட அலகில் மேற்கொள்ளப்பட்டு வரும் காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி சாலை மேம்பாட்டு பணியை தலைமைப் பொறியாளர் செல்வன் ஆய்வு செய்தார்.
இவ்வாய்வின்போது, இச்சாலையில் சாலைப் பணிகள் நடைபெறும் இடங்களில் சாலைப் பாதுகாப்பு பணியை உறுதி செய்யவும், மேலும், இச்சாலைப் பணிக்காக அகற்றப்படும் மரங்களின் எண்ணிக்கைக்கு 10 மடங்கு மரக்கன்றுகள் நடும் பணியை துரிதப்படுத்தவும், சாலைப் பணியை ஒப்பந்தக் காலத்துக்குள் விரைந்து முடிக்கவும், ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்
No comments
Thank you for your comments