Breaking News

ONEMAN GROUPS சார்பில் இளைஞர்கள் உதவி வழங்கல்

காஞ்சிபுரம், நவ.8-

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மழையால் பாதிக்கப்பபட்ட பொதுமக்களுக்கு தேவையான 500க்கும்  உணவு மற்றும் கம்பளம் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கினர்.

வட தமிழகத்தில் வட கிழக்கு மழை  தொடங்கி 2 நாட்களாக தற்போது வரை இடைவிடாத மழை பெய்து வருகிறது. ஓரு நிமிடம் கூட நிற்காமல் மழை பெய்து தொடர்ந்து பெய்து வருவதால் தாழ்வான பகுதியில் வெள்ளம் நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.  

இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடைவிடாத மழை இரவு முழுவதும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதனால் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. 

காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட  இடங்களில் தேடி தனியார் தொண்டு நிறுவனம் ONEMAN GROUPS  சார்பில் இளைஞர்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் தேடி தேடி உணவு பொட்டலங்களும் மழைக்காலத்தில் குளிர்ச்சியான காற்று வீசுவதால் சமாளித்துக் கொள்ள கம்பளமும் 500க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இல்லம் தேடி வழங்கி வருகின்றனர். இதனால் மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் தேடி பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நிவாரணங்களை வழங்கி வருகின்றன.



No comments

Thank you for your comments