Breaking News

இந்தியாவின் முதல் ஏவுகணை எதிர்ப்பு கப்பல் கடற்படையில் இணைப்பு

மும்பை, நவ. 21:

ஐஎன்எஸ் விசாகப்பட்டனம், P15B ராடார் பார்வையில் படாமல் ஏவுகணையை அழிக்கும் திறன்கொண்டது. இந்தக் கப்பல் மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்தியக் கப்பற்படையில்  முறைப்படி ஞாயிற்றுக்கிழமை (21-11-2021) அன்று  இணைக்கப்பட்டது. இந்தியாவில் விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்ட முதல் ஏவுகணை எதிர்ப்பு கப்பலாகும்...

 பாதுகாப்பு அமைச்சரின் உரையில் முக்கிய அம்சங்கள்:

ஐஎன்எஸ் விசாகப்பட்டனம் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும், தேச நலன்களைப் பாதுகாக்கும்

‘இந்தியாவில் உற்பத்தி, உலகுக்கான உற்பத்தி’ என்ற இலக்கை அடைவதை நோக்கிய பிரம்மாண்ட பாய்ச்சல்

பொதுத்துறை – தனியார் துறை பங்களிப்பு விரைவில் உலகளாவிய கப்பல் கட்டும் தளமாக இந்தியாவை மாற்றும்

இந்திய பசிபிக் பகுதியை வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து உள்ளதாகவும் வைத்திருப்பது இந்தியக் கப்பற்படையின் முதன்மை நோக்கமாகும்

பங்கேற்கும் அனைத்து நாடுகளின் நலன்களையும் பாதுகாப்பதாக சட்ட அடிப்படையிலான இந்திய பசிபிக் பிராந்தியம் என்பதை நாம் எண்ணிப்பார்க்கிறோம்

நிலைத் தன்மைக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் சட்டத்தின் அடிப்படையிலான கடல் பயன்பாட்டு சுதந்திரம் மற்றும் கடல் பாதைகளின் பாதுகாப்பு அவசியமாகும்.


மும்பை கடற்படைத் தளத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்திய கடற்படையில் முதலாவது ஏவுகணை எதிர்ப்பு கப்பல் இணைக்கப்பட்டது.

The Union Minister for Defence, Shri Rajnath Singh during the commissioning ceremony of INS Visakhapatnam, at Naval Dockyard, Mumbai on November 21, 2021.

இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள ஏவுகணை எதிர்ப்பு கப்பல் முழுக்க முழுக்க இந்தியாவில் கட்டப்பட்டதாகும் இதற்குத் தேவையான இரும்பு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது அதில் பயன்படுத்தப்படும் நவீன கருவிகளில் 75 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும் ஆத்மா நிர்பார் திட்டத்திற்கு சிறந்த உதாரணமாக இந்த ஏவுகணை எதிர்ப்பு கப்பல் அமைந்துள்ளது .


ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் 163 மீட்டர் நீளமும், 17 மீட்டர் அகலமும் கொண்டதாகும். 7400 டன் எடை கொண்ட இது மிகவும் சக்திவாய்ந்த போர்க்கப்பல்களில் ஒன்றாக கருதப்படும். மணிக்கு 30 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது. இந்த கப்பலில் மிக நவீன சென்சார்கள் மூலம் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளையும் சபையில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளையும் அழிக்கக்கூடிய நவீன கருவிகள் உள்ளன.


தேவைக்கு ஏற்ப மிக நீண்ட தொலைவில் உள்ள இலக்குகளை அழிப்பதற்கு உதவும் பீரங்கிகளும் மிகவும் அருகில் உள்ள இலக்குகளை அழிப்பதற்கு உதவும் பீரங்கிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ஏவுகணை எதிர்ப்பு கப்பல் நீர்மூழ்கிகளை தாக்கி அழிப்பதற்கான ஏவுகணைகளை ஏவும் திறனும் உடையதாகும்.  இந்த கடற்படைக் கப்பலை கண்டறிய முடியாது.

இந்த நிகழ்வில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், 

நாட்டில் வளர்ந்துவரும் கடல்சார் ஆற்றலின் அடையாளமாக ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டமான ‘இந்தியாவில் உற்பத்தி, உலகத்திற்கான உற்பத்தி’ என்ற இலக்கை அடைவதில் முக்கியமான மைல்கல் என்று கூறினார். 

தொன்மையான மற்றும் மத்திய கால  இந்தியாவின் கடல்சார்ந்த ஆற்றல், கப்பல் கட்டும் திறன், புகழ்மிக்க  வரலாறு ஆகியவற்றை நினைவுபடுத்துவதாக இந்தக் கப்பல் உள்ளது.

நவீன உத்திகளையும் ஆயுதங்களையும் கொண்டுள்ள இந்தக் கப்பல் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் தேசத்தின் நலன்களைப் பாதுகாக்கும் என்று  ராஜ்நாத் சிங் நம்பிக்கை  தெரிவித்தார். உலகில் 

ஏவுகனையைத் தாக்கி அழிக்கும் திறன்கொண்ட கப்பல் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டதாகும் இது என்றும் இராணுவத்தின், ஒட்டுமொத்த தேசத்தின் நிக்ழ்கால மற்றும் எதிர்காலத் தேவைகளை இது பூர்த்திசெய்யும் என்றும் அவர் கூறினார்.

இந்தியக் கப்பற்படையின் தற்சார்பு முயற்சிகளைப் பாராட்டிய திரு ராஜ்நாத் சிங் இந்தியக் கப்பல்கட்டும் தளங்களிலிருந்து 41 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களில் 39 ஆர்டரை கப்பற்படை பெற்றிருப்பது தற்சார்பு இந்தியா சாதனையை நோக்கிய உறுதிப்பாட்டின் சான்றாகும் என்றார். 

விமானம் தாங்கி கப்பலான உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ரந்த் தற்சார்பு இந்தியா சாதனை பாதையை எட்டுவதற்கு முக்கியமான மைல்கல்லாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

பிரதமரின் தொலைநோக்குத் திட்டமான சாகர் (இந்தப் பிராந்தியத்தில் அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் இந்தியக் கப்பற்படையின் முயற்சிகளைப் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்.

இந்த விழாவில் கப்பற்படை தளபதி அட்மிரல் கரம்வீர் சிங், நாடாளுமன்ற உறுப்பினர் திரு அர்விந்த் சாவந்த், மேற்குப்பகுதி கப்பற்படை தளபதி வைஸ்அட்மிரல் ஆர் ஹரிகுமார், மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான ஓய்வுபெற்ற வைஸ் அட்மிரல்  நாராயண் பிரசாத் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



No comments

Thank you for your comments