அவதார் படத்தில் வரும் காடுகளில் பல வண்ணங்களில் முளைக்குமா காளான் ? .... வைரல் வீடியோ
இந்த வீடியோவை 4.50 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 9 ஆயிரம் நபர்கள் இந்த வீடியோவை தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
இயற்கை மிகவும் அற்புதமும் அதே நேரத்தில் ஆபத்துகளாலும் நிரம்பியுள்ளது என்றால் அது மிகையானது அல்ல. இயற்கையை அப்படியே ஓவியமாக, கலையாக கொண்டுவருவது கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும்.
உயிருள்ள ஒன்றை உயிரோட்டமான ஒன்றாக மாற்றி அசத்தியுள்ளார் இந்த கலைஞர். லூக் பென்ரே என்ற கலைஞர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பல வண்ணங்களால் ஆன வலை அமைப்புடன் கூடிய காளான் ஒன்று ஆடுகிறது.
Mushroom of Paradise 2/3 pic.twitter.com/5aum6pMDSM
— Luke Penry (@eLPenry) November 18, 2021
இந்த வீடியோவை 4 லட்சத்திற்கு 47 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். கிட்டத்தட்ட 9 ஆயிரம் நபர்கள் இந்த வீடியோவை தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த அனைவரும் இந்த உயிரினம் உண்மையிலேயே எங்கோ இருக்கிறது என்று நம்பி அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் அது டிஜிட்டல் க்ரியேசன் என்பது மிகவும் லேட்டாக தான் தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ மட்டுமின்றி லூக்கின் மற்ற பல வீடியோக்களும் ஆச்சரியத்தில் நம்மை ஆழ்த்தியுள்ளனர்.
Mushroom of Paradise 1/3 - More to come!🍄 pic.twitter.com/85eFM3nCRE
— Luke Penry (@eLPenry) November 12, 2021
தெற்கு லண்டலின் வசித்து வரும் லூக் பென்ரி அப்ஸ்ட்ராக்ட் நேச்சுரல் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து வருகிறார். இவரின் மற்ற டிஜிட்டல் படைப்புகளுக்கு கிடைக்காத வரவேற்பு இந்த வீடியோக்களுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments