நமக்கு நாமே திட்டம் தொடக்கம்
திருவள்ளூர், நவ.22-
திருவள்ளூர் மாவட்டம் சென்னைக்கு அருகாமையில் உள்ள ஆவடி மாநகராட்சியில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் நமக்கு நாமே திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டம் சுமார் 10 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டதை தொடர்ந்து தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 300 கோடி தொகையை ஒதுக்கீடு செய்யப்பட்டு மேற்கண்ட திட்டத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிப்பினை வெளியிட்டார்.
இத்திட்டத்தில் பூங்கா நீர் நிலை மேம்பாடு செய்தல் விளையாட்டு பொருட்கள் பள்ளிகூடம் மேம்படுத்துதல் தெருவிளக்கு அமைத்தல் செய்து கொள்ளலாம் இதன் அடிப்படையில் ஆவடி மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஆவடி மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் நகரமைப்பு அலுவலர் தினகரன் பொறியாளர் வைத்திலிங்கம் மற்றும் சத்தியசீலன் நிர்மலாதொழிலதிபர்கள் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், தங்களுடைய பகுதியில் உள்ள வேலைகளை மாநகராட்சி செய்து கொண்டு இருக்கும் நிலைமையில் நிதி பற்றாக்குறையினாலும் உங்களால் முடிந்த நிதி கொடுத்து அந்த வேலைகளை முழுமையாக முடித்துக் கொள்ளலாம் என்றும் தொழிலதிபர்களை கேட்டுக்கொண்டார் இந்தப் பணி விரைந்து முடிக்க தாங்கள் முக்கிய பங்குதாரராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


No comments
Thank you for your comments