Breaking News

கோவை அரசு விழாவில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்

கோவை

கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில்,  முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக கோவை மாநகர் வந்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 587.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 70 முடிவுற்ற  திட்டப் பணிகளை திறந்து வைத்து, 89.73 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 128 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (22.11.2021) வழங்கினார். 



முடிவுற்ற திட்டப் பணிகளின் விவரங்கள்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், பொதுப்பணித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கூட்டுறவுத் துறை, பள்ளிக்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 587.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள 70 திட்டப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அடிக்கல் நாட்டிய புதிய திட்டப் பணிகளின் விவரங்கள்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கூட்டுறவுத் துறை ஆகிய துறைகளின் சார்பில் 89.73 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 128 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், கூட்டுறவுத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வனத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, பட்டுவளர்ச்சித் துறை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகிய துறைகளின் சார்பில் 25,123 பயனாளிகளுக்கு 646.61 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.


முன்னதாக, கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.



இவ்விழாவில், பொதுப்பணித் துறை அமைச்சர்  எ.வ. வேலு, தொழில் துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு,  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர்  சு. முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், வனத்துறை அமைச்சர் கா. இராமச்சந்திரன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்   வி. செந்தில்பாலாஜி,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்  கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. ராசா, பி.ஆர். நடராஜன், அந்தியூர் செல்வராஜ்,  கு. சண்முகசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ். சமீரன்,  கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


காலச்சக்கரம் நாளிதழின் (K24 Tamil News) அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ktamilnews


No comments

Thank you for your comments