மின்னல் வேகத்தில் பரவும் புதிய கொரோனா தொற்று ஓமிக்ரோன்
புதுடெல்லி, நவ.29-
கடந்த 24ம் தேதி உலக சுகாதார நிறுவனத்தின் புதிய உருமாறிய கொரோன வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை தென்னாப்பிரிக்கா அறிவித்தது. அதைத் தொடர்ந்து அடுத்த 3 நாட்களுக்குள் மேலும் பல நாடுகளில் ஓமிக்ரோன் (B.1.1.529) என்ற புதிய வகை கொரன் வைரஸ் பரவியுள்ளது.
தற்பொழுது போட்ஸ்வானா, ஹாங்காங், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது. உலக நாடுகள் எல்லாம் தென்னாப்பிரிக்காவுக்கு செல்லும் விமானங்களையும் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களையும் தடை செய்துள்ளன.
ஒமிக்ரான் என்ற பெயரில் உருமாறிய புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள காரணத்தினால் தென்ஆப்பிரிக்காவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான ஒருநாள் போட்டித்தொடர்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அதிக ஆபத்தான டெல்டா வகை கொரோனாவிலேயே வெறும் 8 முறைதான் உருமாற்றம் ஏற்பட்டது என்பதால் ஓமிக்ரோன் இன்னும் ஆபத்து கொண்டதாக பார்க்கப்படுகிறது. இதனால் ஓமிக்ரோன் கொரோனா வைரஸை கவலை அளிக்க கூடிய வைரஸ் வகையாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
ஓமிக்ரோன் கொரோனா 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளதால் இது வேக்சினில் இருந்து எஸ்கேப் ஆகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
அதேபோல் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை இது மீண்டும் தாக்குமோ என்ற அச்சமும் உள்ளது.
ஓமிக்ரோன் கொரோனாவை கவலை அளிக்க கூடிய வகையாக உலக சுகாதார மையம் அறிவித்து இருந்தாலும் இது எவ்வளவு ஆபத்து கொண்டது என்று இன்னும் கண்டறியப்படவில்லை. இது எவ்வளவு வேகமாக பரவும் என்று தெரியவில்லை. அதேபோல் எவ்வளவு உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்றும் உறுதி செய்யப்படவில்லை. 32 முறை உருமாற்றம் அடைந்து இருக்கிறது என்பதாலேயே இதை மோசமான வைரஸ் என்று கூறிவிட முடியாது.
இந்தியாவில் பரிசோதனை தீவிரம்
ஒடிசா மாநிலத்தில் இரண்டு கல்வி நிறுவனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தரவாட், பெங்களூரு, மைசுரு ஆகிய நகரங்களில் மருத்துவக் கல்லூரி உட்பட பல கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று வந்துள்ளது. ஒடிசாவிலும் கர்நாடக மாநிலத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொற்று வைரஸ்களின் மரபணுக்களை கண்டுபிடிக்கும் பணியில் ஆய்வாளர்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த ஆய்வு முடிவுகள் உறுதியாகும் பட்சத்தில் இந்த கல்வி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள தொற்றுக்கள் எந்த வகையைச் சேர்ந்தவை என்ற பிரச்சனை தெளிவாகும். இதற்கிடையில் இந்திய மாநிலங்கள் எல்லாம் மற்ற மாநிலங்களில் இருந்து மாணவர்களும் மற்றவர்களும் தங்கள் மாநிலங்களுக்கு வருவதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறைந்தபட்சம் 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ்களுடன் வந்தால் மட்டுமே கர்நாடக மாநிலத்துக்குள் நுழைய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஆலோசனை
புதிய வகை ஒமிக்ரான் கொரோனா வைரசின் அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். தலைநகர் டெல்லியில் நாட்டின் கொரோனா தொற்றுப் பரவலின் நிலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா, பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா, சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் ஆபத்து அதிகமுள்ளதாக கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் அதிகாரிகளிடம் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், சர்வதேச பயணக்கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கும் திட்டம் குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது
ஐசிஎம்ஆர் தலைமை மருத்துவர் மற்றும் பெருந்தொற்று குழு தலைவர் டாக்டர் சமீரான் பாண்டா விளக்கம்
ஓமிக்ரோன் கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவாக்சின், கோவிஷீல்ட் எப்படி செயலாற்றும் என்று ஐசிஎம்ஆர் தலைமை மருத்துவர் மற்றும் பெருந்தொற்று குழு தலைவர் டாக்டர் சமீரான் பாண்டா விளக்கம் அளித்துள்ளார்.
டாக்டர் சமீரான் பாண்டா அளித்துள்ள விளக்கத்தில், இந்த ஓமிக்ரோன் கொரோனாவின் ஸ்பைக் புரோட்டினில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக எம்ஆர்என் வேக்சின்கள் இதற்கு எதிராக சிறப்பாக செயலாற்ற முடியாது. ஏனென்றால் எம்ஆர்என்ஏ வேக்சின்கள் ஸ்பைக் புரோட்டினைதான் குறி வைக்கும். இப்போது இதிலேயே உருமாற்றம் அடைந்துள்ளதால் மாடர்னா போன்ற எம்ஆர்என்ஏ வேக்சின்கள் ஓமிக்ரோன் கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயலாற்ற வாய்ப்பு குறைவு.
எம்ஆர்என் வேக்சின்களை இதனால் லேசாக அப்டேட் செய்ய வேண்டும். ஆனால் எல்லா வேக்சினும் ஒரே மாதிரி கிடையாது. கோவாக்சின், கோவிஷீல்ட் எம்ஆர்ஏ வேக்சின் கிடையாது. இவை வைரல் வெக்டர் வகை வேக்சின். உடலில் இருக்கும் வெவ்வேறு ஆண்டிஜன் மூலம் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகியவை எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். ஓமிக்ரோன் கொரோனா குறித்து முழுமையாக தெரிந்தால் மட்டுமே கோவாக்சின், கோவிஷீல்ட் வேக்சின்களின் பலம் குறித்தும் தெரிவிக்க முடியும்.
புதிய ஓமிக்ரோன் கொரோனா குறித்து நிறைய ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும். இப்போது வரை வெளியாகி இருக்கும் ஆராய்ச்சி முடிவுகள் படி இது வேகமாக பரவும் திறன் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போது இந்த நொடியில் இது வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறதா, கிளஸ்டர்களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறதா என்று சொல்ல முடியாது. இதற்கு இன்னும் பல ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும்.
பல்வேறு மக்களை டெஸ்ட் செய்ய வேண்டும். மரணித்தவர்கள் உடலில் என்ன வகை கொரோனா தாக்கியது என்று ஜீன் ஆராய்ச்சி செய்ய வேண்டும். உலக சுகாதார மையம் முழுமையாக டேட்டா வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும். இதை கவலை அளிக்க கூடிய வகை கொரோனா என்று உலக சுகாதார மையம் அறிவித்து இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இதில் அதிக உருமாற்றம் அடைந்துள்ளதால் அதிக கவலை அளிக்கிறது என்று ஓமிக்ரோன் கொரோனா குறித்து ஐசிஎம்ஆர் தலைமை மருத்துவர் மற்றும் பெருந்தொற்று குழு தலைவர் டாக்டர் சமீரான் பாண்டா விளக்கம் அளித்துள்ளார்.
முழுமையான டேட்டா வந்த பின்பே ஓமிக்ரோன் கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவாக்சின், கோவிஷீல்ட் எப்படி செயலாற்றும் என்று தெரிவிக்க முடியும் என்றும், மாடர்னா போன்ற எம்ஆர்என்ஏ வகை வேக்சின்களின் ஆற்றல் இதற்கு எதிராக குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
No comments
Thank you for your comments