Breaking News

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய கேள்விகள் என்ன? - எம்.பி., டி.எம். கதிர் ஆனந்த்

வேலூர்:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தொகுதி மேம்பாட்டு திட்டங்கள் அரசு பணிகள் குறித்த கேள்விகளையும் மின்னஞ்சல் மற்றும்  வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் என்று  வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து  வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். கதிர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தியில், 

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் இறுதியில் துவங்க என்பதை நீங்கள் அறிவீர்கள் இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் மற்றும் அவர்களிடம் நீங்கள் கேட்க விரும்பும் துறைசார்ந்த கேள்விகளையும் வேலூர் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டங்கள் அரசு பணிகள் குறித்த கேள்விகளையும் எனக்கு மின்னஞ்சல் mpoffice@kathiranand.in மற்றும் கைபேசி எண்  94443 76666 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தெரிவித்தால் அவற்றை தொகுத்து உங்களின் சார்பில் அவைகளை இந்த கூட்டத்தொடரில் எழுப்புவேன்.

இவ்வாறு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார். 




No comments

Thank you for your comments