Breaking News

இன்று எந்தந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை?

 சென்னை:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவம்பர் 18) தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகர்கிறது.

இதனால் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்திற்கு இன்று ரெட் அலெர்ட் வானிலை ஆய்வுமையம் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், வானம் மேகமூட்டமாக உள்ளது.

ராணிப்பேட்டையில் மழை பெய்து வருகிறது. வேலூரிலும் நேற்று முழுவதும் மழை பெய்து வருகிறது...

 திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 


 


 

No comments

Thank you for your comments