Breaking News

அரசமைப்பு உரிமை கல்வி மாணவர் மன்றம் சார்பில் குழந்தைகள் தின விழா

தருமபுரி, நவ.16-

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் ஏரியூர் ஒன்றியம் அரசமைப்பு உரிமை கல்வி மாணவர் மன்றம் சார்பில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது.

விழாவில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரங்கநாயகி மற்றும் ரியல் பவுண்டேசன் இயக்குநர் செந்தில்ராஜா பங்கேற்று சிறப்புரை ஆற்றினர் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் நவம்பர் 14 நேரு பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடபடுவதை முன்னிட்டு 14 என குழந்தைகள் எழுத்து வடிவில் நின்று விழாவினை கொண்டாடினர். பின்னர் மத்தாப்பு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிபடுத்தினர் நிகழ்ச்சியை நெறியாளர் தனலட்சுமி ஏற்பாடு செய்து இருந்தார்.... அது போல பென்னாகரத்தில் சமாதானபுறா பறக்கவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் குழந்தைகள் பங்கேற்று புறாவை பறக்கவிட்டனர்.

பின்னர் குழந்தைகளிடையே பட்டம் விடும் போட்டி நடைபெற்றது பட்டம் விட்டு அனைத்து குழந்தைகளும் மகிழ்ச்சியில் ஆனந்தமாக விழாவினை கொண்டாடினர் மேலும் பரதநாட்டியம். பாடல் ஆடல் என ஒரே குதூகலமாக நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்வினை  நெறியாளர் முத்துமாரி  ஏற்பாடு செய்து இருந்தார்

No comments

Thank you for your comments