பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கல்
நாமக்கல், நவ.17-
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடைபெற்றது.
குறைதீர் கூட்டத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டி சுமார் 216 புகார் மனுக்களை பொது மக்களிடம் இருந்து ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், கோனூர் கிராம 3 பயனாளி களுக்கும், செல்லப் பம்பட்டி கிராம 21 பயனாளிகளுக்கும், களங்காணி கிராம 56 பயனாளிகளுக்கும் என மொத்தம் 80 பயனாளிகளுக்கு ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேலு, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் (பொறுப்பு) ஜோதி உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments