Breaking News

கால்வாய் ஆக்கிரமிப்பு... ஊருக்குள் புகுந்த கழிஞ்சூர் ஏரி தண்ணீர்... பொதுமக்கள் பெரும் அவதி...

காட்பாடி:

காட்பாடி கழிஞ்சூர் ஏரி நிரம்பி  உபரி நீர்  அருப்புமேடு வழியாக கால்வாயின்  மூலம் தண்ணீர் வெளியேறுகிறது. அருப்புமேடு கால்வாய்  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஊருக்குள் நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.


தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டியது. தற்போது வடகிழக்கு பருவமழையும் பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்திலும் மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகள் நிரம்பியது.

ஆந்திராவில் பெய்த கனமழையால், கலவகுண்டா அணையில் இருந்து வினாடிக்கு 65ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் பொண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

வேலூரில் பொன்னை ஆற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இரண்டு பிரதான பாலங்கள் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, கிளை ஆறுகளில் இருந்தும் பொன்னை ஆற்றுக்கு தண்ணீர் வருவதால், பொன்னை வழியாக சென்னை செல்வோர் பயன்படுத்தக்கூடிய பாலமும், மேல்பாடியில் இருந்து பொன்னை செல்வோர் பயன்படுத்தும் தரைப்பாலமும் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் காட்பாடி கழிஞ்சூர் ஏரி நிரம்பி  உபரி நீர்  அருப்புமேடு வழியாக கால்வாயின்  மூலம் தண்ணீர் வெளியேறுகிறது.  கால்வாய் பகுதிகள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் தண்ணீர் செல்ல முடியாமல்  கால்வாய் மீறி தண்ணீர் தற்போது மதிநகர் மற்றும் ஆஸ்கார் சினிமாஸ் பின் ஏரியாவுக்கு  சென்று கொண்டுள்ளது. கனி அமுது மண்டபம் ரோட்டில் முழங்கால் அளவிற்கு தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. 

கோபாலகிருஷ்ணா நகர் பகுதியில், இடுப்பளவுக்கு சூழ்ந்த வெள்ளம் வீடுகளுக்குள்ளும் புகுந்தது. மழைநீரோடு கழிவுநீரும் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

இந்த  30 அடி அகலமுள்ள  கால்வாய் அருப்புமேட்டில் தொடங்கி மெயின் ரோடு வர வர 3 அடியாக குறுகியுள்ளது.  கால்வாய் ஆக்கிரமித்ததால் தற்போது கால்வாய் தண்ணீர் ஊரை ஆக்கிரமித்துள்ளது...

தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவேண்டும் என்றும் உடனே ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை கண்காணிக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தொடர்ந்து ஏரி, கால்வாய்கள் முழுவதும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. 

🔏செய்தியாளர் ஜெயகாந்தன்

No comments

Thank you for your comments