பாலாற்று வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை தேடும் பணி தீவிரம்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே பாலாற்று வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட பாலாற்று பகுதிகளில் வெள்ளப்பெருக்கு சென்றும் வரும் நிலையில் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான பெரும்பாக்கம் பாலாற்று பகுதியிலுள்ள தரைப்பாலத்தில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
இதன் காரணமாக பெரும்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் வட இலுப்பை பகுதிக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரும்பாக்கம் பெரிய காலனியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், பச்சையப்பன், ஆகியோர் வெள்ள அபாய எச்சரிக்கையும் மீறி பாலாற்றில் வெள்ள நீரில் இறங்கி வட இலுப்பை சென்றுவிட்டு மீண்டும் பெரும்பாக்கத்தில் திரும்பி உள்ளனர்.
அப்பொழுது எதிர்பாராதவிதமாக வெள்ளநீர் அதிகரிக்கவே நிலை தடுமாறி கீழே விழுந்த இருவரும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதில் சந்தோஷ் குமாருக்கு நீச்சல் தெரியவே நீந்தி மேல் ஏறி விட்டார் ஆனால் பச்சையப்பன் வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போனார்.
இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்து பாலாற்று வெள்ளப்பெருக்கில் தேடும் பணியை மேற்கொண்டனர்.
இருப்பினும் பச்சையப்பனை கண்டுபிடிக்க முடியாததால் உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீவிரமாக தேடும் பணி தற்போது பெரும்பக்கம் பாலாற்று பகுதியில் நடைபெற்று வருகிறது.



No comments
Thank you for your comments