Breaking News

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை.... அரசாணை வெளியீடு

சென்னை, நவ.2-

தீபாவளிக்கு மறுநாளான 5ம் தேதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வருகிற 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடு வார்கள். 

இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாளான 5ம் தேதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 5ம் தேதி அளிக்கப்படும் விடுமுறையை ஈடுசெய்ய வரும் 20ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5ம்தேதி விடுமுறையால் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதனால் சந்தோசமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த விடுமுறையை அளித்துள்ளது.




No comments

Thank you for your comments