காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக நவ.30ம் தேதிபள்ளிகளுக்கு விடுமுறை
காஞ்சிபுரம் :
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று உருவாக இருந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக நவ.30ம்தேதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் போது வலுவடைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நவ.30ம் தேதி உருவாகிறது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு, வட மேற்கு திசையில் நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மேலும் வலுவடையும் சமயத்தில் தமிழகத்தில் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவ.30ம்தேதி, கன்னியாகுமரி, திருநெல் வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை யின் காரணமாக பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30.11.2021ம் தேதி செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments
Thank you for your comments