Breaking News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மத்திய அரசின் குழு இன்று பார்வையிட்டு விவசாயிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் இடம் குறைகளை கேட்டறிந்தனர். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த இரு வாரங்களாக பல மாவட்டங்களில் கன மழை பெய்து வெள்ளப்பெருக்கு விவசாய நிலங்கள் சேதம் மற்றும் குடியிருப்பு வாசிகள் இன் வீடுகளில் நீர் சூழ்ந்து பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளானர்கள். 

இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு களுக்கு மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோரிக்கை வைத்த நிலையில் மத்திய அரசு இரண்டு கூறுகளை வெள்ளம் சேதம் குறித்து பார்வையிட்டு கணக்கிட அனுப்பி வைத்தது. 

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர் இன்று வரதராஜபுரம் புவனேஸ்வரி நகர் பகுதியில் அமைந்துள்ள அடையாறு கால்வாய் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளை ஆய்வு மேற்கொண்டனர். 

அதன்பின் அங்கு அமைக்கப்பட்ட வீடியோ காட்சி மூலம் மாவட்டத்தின் வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மத்திய குழுக் எடுத்துரைத்தார். அதன்பின் பல்வேறு துறைகளில் சார்பாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் மற்றும் வெள்ள பாதிப்பு தடுப்பு பணிகள் குறித்த புகைப்படங்கள் மூலமும் மத்திய குழுவிற்கு எடுத்துரைக்கப்பட்டது. 

அதன்பின் காஞ்சிபுரம் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளிடம் மாவட்டத்தின் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அதேபோல் அங்குள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரிடம் மத்தியக்குழுவினர் வெள்ள பாதிப்புகள் குறித்து நேரடியாக கேட்டறிந்தார். 

இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுப்பணித் துறை வேளாண்மைத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர். இதையடுத்து செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.

🔥Click and Join 

No comments

Thank you for your comments