Breaking News

5 நாள் சுற்றுப்பயணம் முடிந்து டெல்லி வந்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி, நவ.3-

ஜி-20 மற்றும் ஐநாவின் சிஒபி 26 கிளாஸ்கோ மாநாடு முடிந்து பிரதமர் மோடி இன்று காலை 8 மணிக்கு டில்லி வந்து சேர்ந்தார்.

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் கடந்த அக்டோபர் 29, 30 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். இந்த மாநாட்டின் போது உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானாம், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்கல், துருக்கி அதிபர் எர்டோகன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்பட பல தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இதனை தொடர்ந்து பிரிட்டன் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உலகத்தலைவர்கள் மாநாடு (நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டிலும் பங்கேற்ற பிரதமர் மோடி பிற நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாடினார்.

கிளாஸ்கோ நகரில் இந்திய வமிசாவளியினர் இந்திய பிரதமருக்கு உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். இந்தியா தலைவர்கள் ஒருவர் ஒருவராக அறிமுகம் செய்து கொண்டனர்.அவர்களிடம் கைகுலுக்கி விடை பெற்றார். இந்திய குழுவினர் ஏற்பாடு செய்த பேண்டு வாத்தியக் கோஷ்டியினர் அங்கு உற்சாகமாக இசைத்துக் கொண்டிருந்தனர். அவர்களிடமும் மோடி விடை பெற்றார்.

அப்பொழுது டிரம் வாசிப்பவர் தனது டிரம் குச்சியை மோடியிடம் கொடுத்தார். மோடி அந்தப் பிரம்பால் டிரம்மில் அடித்தார். அதன் பிறகு பிரம்பை அவர்களிடம் தந்துவிட்டு விடைபெற்றார். விமான வாயிலில் நின்று கையசைத்து விடை பெற்றார் மோடி.  

செவ்வாய் இரவு 12 மணியளவில் கிளாஸ்கோவில் இருந்து இந்திய பிரதமர் பயணம் செய்த சிறப்பு விமானம் புறப்பட்டது. அவர் இன்று காலை 8 மணியளவில் டெல்லி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.

No comments

Thank you for your comments