தொடர் கனமழையால் நீரில் மூழ்கி 3000 ஏக்கர் நெற் பயிர்கள் சேதம்...
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தாலுக்காவில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக நீரில் மூழ்கி 3000 ஏக்கர் நெற் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
வயல் வெளியிலேயே நெற்பயிர்கள் மீண்டும் முளைக்கத் தொடங்கிய பரிதாபம்.
ஹெக்டருக்கு 40 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தொடர் கனமழை காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பெய்து வருகிறது.
கனமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், உள்ளிட்ட தாலுக்காக்களில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் முழுவதுமாக மழை வெள்ள நீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்துள்ளது.
காஞ்சிபுரம் தாலுக்காவில் மட்டும் 3000 ஏக்கர் நெல் பயிர்கள் சேதமடைந்து வயல்களிலேயே மீண்டும் முளைக்க தொடங்கி விட்டது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிப்படைந்து பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் தாலுக்கா கோவிந்தவாடி அகரம் பிர்காவிற்கு உட்பட்ட புதுப்பாக்கம், வேளியூர், உவேரி, கோவிந்தவாடி அகரம், கம்மவார்பாளையம்,உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் மழைநீர் வயல்வெளிகளில் தேங்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர் களுக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள கோவிந்தவாடி பிர்க்காவிற்கு உட்பட்ட விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரத்தை காத்து மீண்டும் விவசாய பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு பாதிக்கப்பட்ட வயல்களுக்கு ஹெக்டேருக்கு 40 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


No comments
Thank you for your comments